ADDED : ஆக 27, 2026 01:07 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு, தேனி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை மதுரை ஆணையத்துடன் இணைக்கும் அரசின் முடிவுக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்தான கிருஷ்ணன், செயலாளர் செல்வகுமார், துணை தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் கமல்ராஜ், தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
