ADDED : செப் 28, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.29–
தேனி மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் காமராஜன் தலைமை வகித்தார். மின் கணக்கீட்டாளர் பணியிடங்களை 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் மின்வாரியத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இந்த அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தினர். இதில் மாநில திட்ட செயலாளர் மூக்கையா, செயல் தலைவர் ராஜாங்கம், முத்து முருகன், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
