ADDED : செப் 29, 2026 04:19 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காமராஜன் தலைமை வகித்தார்.
மின் கணக்கீட்டாளர் பணியிடங்களை 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் மின்வாரியத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இந்த அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தினர்.
இதில் மாநில திட்ட செயலாளர் மூக்கையா, செயல் தலைவர்ராஜாங்கம், முத்து முருகன், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
