UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் ‘தகுதிபெற்ற சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். காய்ச்சல் தடுப்பு பணிகளால் பணிச்சுமை ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை வேண்டும். பிற துறைகளுக்கான பணிகளை தங்களுக்கு ஒதுக்குவதை கைவிட கோரி,’ ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜா, பொருளாளர் சரவணகுமார், துணை தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
