UPDATED : அக் 03, 2026 07:49 AM
ADDED : அக் 03, 2026 07:46 AM
அ நிறம் | அளவு
போடி: போடி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையில் போடி நகராட்சி சார்பில் பொறியாளர் குணசேகரன் தலைமையில், சுகாதார அலுவலர் அரசகுமார் முன்னிலையில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண் டனர்.
சிமென்ட் தண்ணீர் தொட்டி, பிளாஸ்டிக் தொட்டியில் தேக்கி வைத்துள்ள நீரில் கொசு முட்டைகள் தேங்காத வகையில் சுத்தம் செய்திட அறிவுறுத்தினர். டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து மக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
