UPDATED : அக் 29, 2026 10:38 PM
ADDED : அக் 29, 2026 10:34 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளுதல், குப்பையை ஈரக்கழிவுகள், உலர்கழிவுகள், அபாயகரமான கழிவுகள், சுகாதார கழிவுகள் என பிரித்து வழங்குவது பற்றி நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ்பாண்டியன் மாணவிகளுக்கு விளக்கினர். கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டிகள் நடத்தியதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
