தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தி.மு.க.,  எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில் பாரபட்சம் இன்றி வளர்ச்சி பணிகள் அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு

 தி.மு.க.,  எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில் பாரபட்சம் இன்றி வளர்ச்சி பணிகள் அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு

 தி.மு.க.,  எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில் பாரபட்சம் இன்றி வளர்ச்சி பணிகள் அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு


ADDED : ஜூலை 04, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: ''தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில் த.வெ.க., அரசு பாரபட்சம் காட்டாமல் வளர்ச்சி பணிகளை செய்து கொடுக்கும்,'' என, தேனி மாவட்டம் வீரபாண்டியில் த.வெ.க., சார்பில் நடந்த முதல்வர் விஜய் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் நிர்மல்குமார் பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது: த.வெ.க.வின் ஆட்சி அமைந்து 2 மாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள் மாநில நிதி நிலையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத நிலையை உருவாக்கி உள்ளோம். தி.மு.க., ஆட்சியில் குறைந்தளவிலேயே அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் த.வெ.க., அரசு 2 மாதங்களுக்குள் பல ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னும் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி காலம் உள்ளது. அதற்குள் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வரும்.

தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய குவாரிகள் கணக்கெடுக்கப்பட்டு மூடப்பட்டு வருகின்றன. போடி தொகுதியில் தி.மு.க., எம்.எல்.ஏ., உள்ளார். அதற்காக அவரது தொகுதிக்கு த.வெ.க., அரசு நலத்திட்டங்கள் செய்யாமல் இருக்காது. மாநிலத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க., அரசு பாரபட்சம் பார்க்காமல் வளர்ச்சி பணிகளை செய்து கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us