ADDED : ஜன 10, 2026 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் எ.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் மனுநீதிசெல்வன் 28. தனது தாயாருடன் பழநி பாதயாத்திரை சென்றார். பெரியகுளம் வத்தலக்குண்டு ரோடு அக்சயா கார்டன் அருகே, பின்னால் வந்த டூவீலர் மனுநீதி செல்வன் மீது மோதியது.
இதில் காயமடைந்த மனுநீதி செல்வன் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியவரை தேடி வருகின்றனர்.-

