/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மார்கழி மாத பிறப்பையொட்டி பக்தர்கள் பஜனை பாவை நோன்பு துவக்கிய கன்னிப் பெண்கள்
/
மார்கழி மாத பிறப்பையொட்டி பக்தர்கள் பஜனை பாவை நோன்பு துவக்கிய கன்னிப் பெண்கள்
மார்கழி மாத பிறப்பையொட்டி பக்தர்கள் பஜனை பாவை நோன்பு துவக்கிய கன்னிப் பெண்கள்
மார்கழி மாத பிறப்பையொட்டி பக்தர்கள் பஜனை பாவை நோன்பு துவக்கிய கன்னிப் பெண்கள்
ADDED : டிச 17, 2025 05:52 AM

பெரியகுளம், டிச. 17-
பெரியகுளம் பகுதியில் மாதப் மார்கழி பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் பஜனைபாடினர். கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, பெரியகுளம் அருகே மேல்மங்கலம் வடக்கு தெரு பாலசுப்பிரமணிய பஜனைக்குழுவினர் காலை 5:30 மணிக்கு நாதஸ்வரம், தவில், ஜால்ரா உட்பட இசைக்கருவிகளுடன் பஜனையை துவங்கினர். முருகன், அண்ணாத்துரை, ஆறுமுகம், விஸ்வேஸ்வரன், நாராயணன் உட்பட 20 பக்தர்கள், திருப்பாவை, திருவெம்பாவை பாடிக்கொண்டு வடக்குதெருவில் துவங்கி, சுந்தரமகாலிங்கம் கோயில், பத்தினி அம்மன் கோயில் உட்பட மேல்மங்கலம் தெருக்களில் ஒன்றரை மணி நேரம் பஜனை பாடி சென்றனர். மார்கழி மாதம் முழுவதும் இந்த பஜனை நடத்த உள்ளனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், சங்கவிநாயகர் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்:
கம்பம்: திருமாலே தனக்கு கணவராக வர வேண்டும் என்று ஆண்டாள் பாவை நோன்பு இருந்தார். அந்த அடிப்படையில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும், என்று வேண்டி நேற்று முன்தினம் அதிகாலை சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் நடைபெற்ற மார்கழி பூஜைகளில் பங்கேற்று பாவை நோன்பை துவக்கினர், பெருமாள் கோயில்களில் திருப்பாவை 30 பாடல்களும், சிவன் கோயில்களில் திருவெம்பாவை 10 பாடல்களும் பாடுவது துவங்கியது.
கம்பம் கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கோயில், உத்தமபாளையம் யோகநரசிங்கபெருமாள், காளாத்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் பெருமாள், சிவகாமியம்மன் கோயில்களிலும் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள்,பெண்கள் அதிகளவல் பங்கேற்றனர்.
பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை:
போடி: -மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க கவச அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயில், பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லையா சுவாமி கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
--

