தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கரும்பு தொட்டில் நேர்த்திக் கடன் பக்தர்கள் பரவசம்

 கரும்பு தொட்டில் நேர்த்திக் கடன் பக்தர்கள் பரவசம்

 கரும்பு தொட்டில் நேர்த்திக் கடன் பக்தர்கள் பரவசம்


ADDED : பிப் 03, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி சிவராத்திரி திருவிழா துவங்குவதை முன்னிட்டு தினமும் கரும்பு தொட்டியில் பிள்ளைகளை உட்கார வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது துவங்கியது.

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் மாசிசிவராத்திரி விழா ஜன.25 ல் முகூர்த்தகால் நடும் விழா நடந்தது.

பிப்.,15 முதல் 22 வரை 8 நாட்கள் திருவிழா நடக்கிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். தங்களுக்கு பிள்ளைவரம் கொடுத்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பிள்ளையை தொட்டியில் உட்காரவைத்து ஒரு புறம் கணவனும், மறுபுறம் மனைவியும், நடுவில் உறவினர்கள்ஒன்று கூடி, கரும்பு தொட்டிலை தூக்கி கோயில் உள்பிரகாரத்தைச் சுற்றி, அம்மனை தரிசனம் செய்கின்றனர்.திருவிழா காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், வெளியூரிலிருந்து பிப்., முதல் வாரம் முதல் இவ்வகையான நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். இதற்காக கோயில் வளாகத்தில் ஒரு ஜோடி கரும்பு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது. குழந்தைகள் எடைக்கு தகுந்தாற்போல் இரண்டு ஜோடி முதல் மூன்று ஜோடி கரும்புகள் வாங்கி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us