ADDED : பிப் 23, 2026 06:12 AM

மூணாறு: மூணாறில் இருந்து பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
மூணாறில் இருந்து பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பாத யாத்திரை செல்லும் பல்வேறு குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் குருசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அவர்கள் ஆண்டு தோறும் ஜனவரி முதல் மார்ச் வரையில் பாதயாத்திரை செல்வது வழக்கம்.
மூணாறில் இருந்து 110 கி.மீ., தொலைவில் உள்ள பழநிக்கு ஒவ்வொரு குழுக்களும் தங்களின் வசதிக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடை பயணம் மேற்கொள்கின்றனர்.
மூணாறு நகர், பல்வேறு எஸ்டேட்டுகள், இடமலைகுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை கொண்ட சண்முகநாதன் குழுவினர் பாதயாத்திரை புறப்பட்டனர். கடுங்குளிர், சுட்டெரித்த வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் 'அரோகரா' கோஷம்' முழங்க பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
