/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ைஹதராபாத் முதல் சபரிமலை வரை 1200 கி.மீ., பாதயாத்திரை பக்தர்கள் தேனிக்கு வருகை
/
ைஹதராபாத் முதல் சபரிமலை வரை 1200 கி.மீ., பாதயாத்திரை பக்தர்கள் தேனிக்கு வருகை
ைஹதராபாத் முதல் சபரிமலை வரை 1200 கி.மீ., பாதயாத்திரை பக்தர்கள் தேனிக்கு வருகை
ைஹதராபாத் முதல் சபரிமலை வரை 1200 கி.மீ., பாதயாத்திரை பக்தர்கள் தேனிக்கு வருகை
ADDED : நவ 27, 2025 01:54 AM

தேனி: சபரிமலை ஐயப்பனை காண தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 1200 கி.மீ., நடைபயணம் மேற்கொண்ட பக்தர்கள் நேற்று 34வது நாளில் தேனிக்கு வருகை புரிந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கேரளா, தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் தேனி வழியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானாவை சேர்ந்த சில பக்தர்கள் தேனி நகர் பகுதி வழியாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
பாதயாத்திரை மேற்கொண்டுள்ள மல்லேஷ் கூறியதாவது: ஹைதராபாத், செகந்தராபாத்தில் இருந்து வர்த்தகர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள் என 480 பேர் அக்.,24ல் இருமுடி கட்டு கட்டி நடைபயணமாக புறப்பட்டோம்.
ஆர்.எல்.நாயக், நவீன்யாதவ் ஆகிய குருசாமிகள் எங்களை வழிநடத்தி வருகின்றனர். ஆந்திரா, பெங்களூரு வழியாக ஓசூரை வந்தடைந்தோம். அங்கிருந்து சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி வழியாக சபரிமலை செல்கிறோம். உணவு, உடமைகளை வாகனங்களில் எங்களுக்கு முன் கொண்டு சென்று ஓரிடத்தில் நிற்பார்கள்.
இந்த சேவையை ஐயப்ப பக்த பிரந்தம் அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். தினமும் 35 முதல் 40 கி.மீ., துாரம் நடக்கிறோம். 37 நாட்கள் பயணத்தில் சன்னிதானம் செல்வோம்.
பயணத்தின் 34வது நாளான இன்று தேனி வந்தடைந்தோம். நவ.,29ல் சுவாமி தரிசனத்திற்கு திட்டமிட்டு உள்ளோம். தமிழக பகுதியில் சில பெட்ரோல் நிலையங்களில் எங்களை கழிப்பறைகள் பயன்படுத்த அனுமதிக்காதது வருத்தம் அளிக்கிறது, என்றார்.

