தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/இன்று குடற்புழு நீக்க முகாம்

இன்று குடற்புழு நீக்க முகாம்

இன்று குடற்புழு நீக்க முகாம்


ADDED : பிப் 09, 2024 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 07:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் குடற்புழு தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் உடலில் ஊட்டசத்து குறைபாடு, ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக தேசிய குடற்புழு நீக்க முகாம் இன்று(பிப்.,9), பிப்.,16ல் நடக்கிறது. இதில் குழந்தைகளுக்கு அங்கன் வாடியிலும், மாணவர்களுக்கு பள்ளியிலும், பெண்களுக்கு அங்கன்வாடி மையத்திலும் குடற்புழு நீக்கம் செய்யும் 'அல்பெண்டசோல்' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டத்தில் 162 துணை சுகாதார நிலையங்கள், 1,065 அங்கன்வாடிகள் மூலம் 19 வயதிற்குட்பட்ட 3.64 லட்சம் பேருக்கும், 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் 98,957 பேர் என மொத்தம் 4, 63,925 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

இம்முகாம்கள் பொது சுகாதாரத்துறை, கல்வித்துறை, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட துறைகள் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது. குடற்புழு நீக்க மாத்திரைகளை வாங்கி பயனடையுமாறு கலெக்டர் ஷஜீனா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us