ADDED : மார் 05, 2026 06:15 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் அருகே குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தலைமை வகித்தார். துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாநில தலைவர் அன்வேந்தன், மாநில துணை தலைவர் ஜெகநாதன், மாவட்ட தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கங்கத்தினர் போராட்டம்
