/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்களை தேடி மருத்துவ திட்ட மாத்திரை விநியோகத்தில் குளறுபடி மாவட்டத்தில் சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகள் தவிப்பு
/
மக்களை தேடி மருத்துவ திட்ட மாத்திரை விநியோகத்தில் குளறுபடி மாவட்டத்தில் சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகள் தவிப்பு
மக்களை தேடி மருத்துவ திட்ட மாத்திரை விநியோகத்தில் குளறுபடி மாவட்டத்தில் சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகள் தவிப்பு
மக்களை தேடி மருத்துவ திட்ட மாத்திரை விநியோகத்தில் குளறுபடி மாவட்டத்தில் சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகள் தவிப்பு
ADDED : டிச 14, 2025 06:05 AM

கம்பம், சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மாத்திரை விநியோகத்தில் சில இடங்களில் குளறுபடி நிலவுகிறது. உரிய நேரத்திற்கு மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் நோயாளிகள் தவிக்கின்றனர். மருந்து விநியோகத்தை அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மாதம் ஒரு முறை இந் நோய்களுக்கான மாத்திரைகளை மொத்தமாக வழங்குகின்றனர். தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கிய பின், மருத்துவ பணியாளர்கள் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று இரண்டு மாதங்களுக்குரிய சர்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் தங்களின் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நோயாளிகளுக்குரிய சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் மருந்து மாத்திரைகளை இரண்டு மாதங்களுக்கு தேவையானவற்றை வீடு தேடிச் சென்று மருத்துவ குழுவினர் வழங்கினர்.
அதன்படி நோயாளிகள், இரண்டு மாதங்களுக்கு தேவையான மாத்திரைகளை , மக்களை தேடி மருத்துவ குழுவிடமும், ஒரு மாதம் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நோயாளிகளை டாக்டர் பரிசோதித்து அதற்கேற்ப மருந்து மாத்திரை வழங்கினர்.
இந் நிலையில் மக்களை தேடி மருத்துவ குழுவினர் மாத்திரை விநியோகம் செய்வதில் சில இடங்களில் குளறுபடி நிலவுகிறது.
நோயாளிகள் மாத்திரைகள் முறையாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாத்திரைகள் கிடைக்கவில்லையென்றதும் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மாத்திரை கேட்கின்றனர்.
ஆனால் அவர்களுக்குரிய மாத்திரைகளை மக்களை தேடி மருத்துவ குழுவினரிடம் ஏற்கெனவே வழங்கி விட்டதாக கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கை விரிக்கும் நிலை ஏற்படுகிறது. மக்களை தேடி மருத்துவ குழுவினர் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த சம்பளத்திற்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் பணியாளர்களிடம் ஒருவித அலட்சியம் நிலவுகிறது. எனவே மாத்திரைகள் விநியோகத்தில் பல இடங்களில் குளறுபடி ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது .
எனவே மாத்திரைகள் விநியோகத்தை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

