ADDED : செப் 14, 2026 02:31 PM
கம்பம், செப். 15
கம்பத்தில் மாயமான பெண்ணை கண்டறிய முடியாமல் 15 நாட்களுக்கும் மேலாக போலீசார் திணறி வருகின்றனர்.
கம்பம் ஆங்கூர் பாளையம் ரோடு தெய்வேந்திரன் 48, இவரது மனைவி கமலா 40. இவர் மகளிர் குழுக்களில் கடன் பெற்றது தொடர்பாக சிலர் வீட்டில் வந்து தகராறு செய்தனர். இதனால் பயந்து ஆக.,30ல் வீட்டில் இருந்து வெளியேறினார். தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்காததால் செப்.,2ல் கம்பம் தெற்கு போலீசில் தெய்வேந்திரன் புகார் அளித்தார்.
வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்காமல் கிடப்பில் போட்டனர். உறவினர்கள், கணவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பல முறை சென்றாலும் கமலா பற்றி தகவல் கிடைக்கவில்லை. பெண் மாயமாகி 15 நாட்கள் ஆன நிலையிலும் போலீஸ் விசாரணை சுணக்கம் உள்ளது. அவரை கண்டுபிடித்து தரவ வேண்டும் என எஸ்.பி.,க்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
