ADDED : ஏப் 08, 2026 05:52 AM
தேனி: தேர்தல் பணிகளால் தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம் (தனி), கம்பம் ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெறுவது போன்ற பணிகள் நடப்பதால், தாலுகா அலுவலகங்களை நாடுவதில் சிக்கல் ஏற்படுவதாக பொது மக்கள் புகார் கூறுகினறனர். வேட்பு மனு நாட்களில் காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை பொது மக்கள் தாசில்தார் அலுவலகத்தை அணுக முடியாமல் உள்ளது.
இதனால் கடந்த 30 ந் தேதி முதல் வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதியோர், விதவை சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ் வழங்கும் பணிகளும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட நில அளவீடு பதிவுகள் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடங்கி உள்ளன. தேர்தலால் தாலுகா ஆபீசுக்கு நடையா நடக்க வேண்டி இருக்கு என முதியோர் புலம்புகின்றனர்.
