ADDED : மார் 24, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
கூடலுார்:சட்டசபை தேர்தல் கேரளாவில் ஏப்ரல் 9, தமிழகத்தில் ஏப்.23ல் நடக்கிறது. இதனால் எல்லைப் பகுதியில் வாகனச் சோதனையை தீவிரப் படுத்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சசிமோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தினந்தோறும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
