UPDATED : ஆக 23, 2026 06:57 PM
ADDED : ஆக 23, 2026 06:50 PM
அ நிறம் | அளவு
தேனி:'டிஜிட்டல் கைது' என்று ஒன்று இல்லை. பொதுமக்கள்,ஓய்வூதியர்கள் இந்த வகை மோசடியில் ஏமாற வேண்டும் என தேனி போலீசார் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 'டிஜிட்டல் கைது' மோசடிக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தேனியில் மாவட்ட போலீசாரால் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் எஸ்.பி., பிரவீன் கவுதம் பேசுகையில், டிஜிட்டல் கைது என்று ஏதும் இல்லை. போலீஸ் பெயரை கூறி மிரட்டினால் பணம் வழங்க வேண்டாம். சைபர் மோசடிக்கு இரையாக வேண்டாம், வங்கி கணக்கு விபரங்களை யாரேனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் வழங்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
