/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இணைய வசதி இல்லாத இடங்களில் 'டிஜிட்டல் கிராப்' சர்வே பணி தொய்வு
/
இணைய வசதி இல்லாத இடங்களில் 'டிஜிட்டல் கிராப்' சர்வே பணி தொய்வு
இணைய வசதி இல்லாத இடங்களில் 'டிஜிட்டல் கிராப்' சர்வே பணி தொய்வு
இணைய வசதி இல்லாத இடங்களில் 'டிஜிட்டல் கிராப்' சர்வே பணி தொய்வு
ADDED : அக் 17, 2025 01:53 AM
தேனி: இணைய வசதி இல்லாத இடங்களில் டிஜிட்டல் கிராப் சர்வே பணி மேற்கொள்ள முடியவில்லை. அதே நேரம் சர்வே பணியை மட்டும் கவனிப்பதால் பிற பணிகளை செய்ய முடியவில்லை என வேளாண், தோட்டக்கலை துறையினர் புலம்பி வருகின்றனர்.
தமிழகத்தில் சர்வே எண் வாரியாக சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை டிஜிட்டல் சர்வே செய்யும் பணி ஆக.,ல் துவங்கியது.
தனியார் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் மீண்டும் வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை, பொறியியல், விதை சான்றுத்துறை மூலம் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் கடந்த மாதம் துவங்கின. இதுவரை சுமார் 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால், மீதமுள்ள பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இணைய வசதி இல்லை.
இதனால் கணக்கீடு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சர்வே பணியில் முழுகவனம் செலுத்துவதால் மற்ற திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. அலுவல் பணிகளையும் கவனிக்க முடியவில்லை என புலம்பி வருகின்றனர்.