/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிச.29 முதல் கோமாரி நோய் தடுப்பூசி
/
டிச.29 முதல் கோமாரி நோய் தடுப்பூசி
ADDED : டிச 27, 2025 05:47 AM
தேனி: மாவட்டத்தில் மாடுகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பணிகள் டிச.29ல் துவங்கி, ஜன.18 வரை 21 நாட்கள் நடக்க உள்ளன.'' என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளர்.
அவர் கூறியிருப்பதாவது: கோமாரி நோயால் கலப்பின பசுக்கள் அதிகளவில் பாதிக்கும். காய்ச்சல், தீவனம் உண்ணாதது, அசைபோடாமல் இருத்தல், பால் உற்பத்தி குறைவது, நாக்கு, கால்குளம்புகளின் கொப்புளங்கள் தோன்றுவது இதன் அறிகுறிகளாகும். தடுக்க தடுப்பூசி செலுத்துவது சிறந்த வழி. மாவட்டத்தில் 1,01,966 பசு மாடுகளும், 464 எருமை மாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 53 கால்நடை மருந்தகங்கள், 3 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி டாக்டர், கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. டிச.29 முதல் ஜன.18 வரை 21 நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்க உள்ளன. நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகள், நிறைமாத சினை இல்லாத மாடுகளுக்கும், 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்றார்.

