ADDED : டிச 04, 2024 08:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவுலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது.
எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணக்குமார் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
65 பேருக்கு ரூ.8.09 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.