ADDED : அக் 23, 2024 05:45 AM
அ நிறம் | அளவு
தேனி, : பழனிசெட்டிபட்டி பாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக தேவேந்திர குல வேளாளர் உறவின்முறையை சேர்ந்தவர்கள், கோயில் உற்ஸவ திருவிழா,இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழா அச்சடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அரசு அனுமதியும் இன்றி மேம்பாலத்தில் வைத்திருந்தனர்.
இது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இருந்தது.
எஸ்.ஐ., இதிரிஸ்கான் தலைமையிலான போலீசார் இதனை அகற்றி பிளக்ஸ் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.
