ADDED : ஜூலை 14, 2025 02:46 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சார்பில் முதலாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
தேனி போலீஸ் ஆயுதபடை மைதானத்தில் நடந்த போட்டியில் ரத்னம் கிரிக்கெட் கிளப், ஒய்.எஸ்.சி., அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ரத்னம் அணி 33.4 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.
ஒய்.எஸ்.சி., அணி வீரர் செல்வகுமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேசிங் செய்த ஒய்.எஸ்.சி., அணி 27.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.
