/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட பேச்சுப்போட்டி: விகாசா பள்ளி முதலிடம்
/
மாவட்ட பேச்சுப்போட்டி: விகாசா பள்ளி முதலிடம்
ADDED : ஜூலை 23, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்; தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான பேச்சு போட்டிகள் தேனியில் நடைபெற்றது. இப் போட்டியில் மாவட்டத்தில் உள்ள 66 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி மதனா முதல் பரிசை பெற்றார்.
இவருக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சாதனை மாணவியை பள்ளியின் தாளாளர் இந்திரா, செயலர் உதயகுமார், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா ஆகியோர் பாராட்டினார்கள்.