ADDED : ஜூலை 21, 2025 02:20 AM
தேனி: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி, தங்கதமிழ் அரிமா சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. தனியார் ஓட்டலில் நடந்த போட்டியில் தேனி, திண்டுக்கல் மாவட்ட லயன்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
அகாடமி செயலாளர் மாடசாமி, பொருளாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தனர். தங்கதமிழ் அரிமா சங்க பட்டயத் தலைவர் கண்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். அகாடமி தலைவர் சையது மைதீன் வரவேற்றார். எட்டு வயது பிரிவில் சிந்துஜஸ்வின், பிரனேஷ், தர்ஷ்சவ், 12 வயது பிரிவில் ஸ்ரீஹரன், சாத்வீகா, தேவ் அம்ரித்பொம்மு, 15 வயதிற்கு உட்பட்ட பிரிவில் திருகார்த்திக், சித்தார்த், தீபேஷ் ஸ்ரீவட்சன் உள்ளிட்டோர் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அகாடமி நிர்வாகிகள் பரிசு வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்கள் திருச்சியில் ஜூலை 27 ல் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டி ஏற்பாடுகளை நடுவர்கள், அகாடமி இயக்குநர்கள் அஜ்மல்கான், நுார்ஜகான் செய்திருந்தனர்.