தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்ட அளவிலான செஸ் போட்டி

 மாவட்ட அளவிலான செஸ் போட்டி

 மாவட்ட அளவிலான செஸ் போட்டி


ADDED : ஜன 27, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: குடியரசுதின விழாவை முன்னிட்டு தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். முன்னதாக அகாடமியின் தலைவர் சையது மைதீன் வரவேற்றார். ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா போட்டிகளை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கினார். 8, 10, 14 வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.

8 வயது பிரிவில் சர்வேஷ்குமார், வருண் கிருஷ்ணன், தர்ஸ்சவ், ஆத்விக், பிரனேஷ், ஹரிஹரயுகன், பிரத்திக்ஷா, மிர்தியுன்ஜெயன், சாகித்திய மித்திரன், நிதாஸ்ரீ ராஜபாண்டியன் வெற்றி பெற்றனர்.

10 வயது பிரிவில் செல்வநிரன்ஜன், மிதுன், தருஷ், யுவகிருஷ்ணா, ரிஷிவரதன், விதுஷ், வருணிக்கா, ஜெய்சரண், பிரனிஷ்ராஜ், செபினா அடலின் வென்றனர். 14 வயது பிரிவில் சாத்வீகா, சாய்சரவணா, ஹரிஷ், அகிலேஷ், ஜெயபாலன், ரிஷிநந்தன், புவன்சங்கர், ஹரிஷ், நிலேஷ்முகுந்தன், சமர்பாண்டியன் வென்றனர்.

இளம் சதுரங்க வீரர்களாக ஸ்ரீமுகிலா, விகான், சம்வர்த்தனா ஆகியோர் தேர்வாகினர். போட்டி ஏற்பாடுகளை இயக்குனர் அஜ்மல்கான், இணை செயலாளர் நூர்ஜஹான் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us