தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்ட அளவிலான செஸ் போட்டி

மாவட்ட அளவிலான செஸ் போட்டி

மாவட்ட அளவிலான செஸ் போட்டி


ADDED : ஆக 16, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, ஆக.17–

தேனியில் கிராண்ட் மாஸ்ட் செஸ் அகாடமி, ஜே.சி.ஐ., அலுமினி கிளப் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.

அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். ஓய்வு வனச்சரகர் அமானுல்லா முன்னிலை வகித்தார். அகாடமி தலைவர் சையது மைதீன் வரவேற்றார். பெரியகுளம் எம்.எல்.ஏ., சபரி ஐயங்கரன் பங்கேற்றார். 8 வயது பிரிவில் ஆத்விக், ஹரிஹரயுகன், கீர்த்தீஸ், 10 வயது பிரிவில் சர்வதேவ், தரூஷ், ரிஷிநந்தனும், 12 வயது பிரிவில் கவின்யா, வருனிக்கா, கரிஷ், 15 வயது பிரிவில் தியாஸ்ரீ, சாத்விகா, சாய் சரவணன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தேனி கம்மவார் பப்ளிக் பள்ளி முதல்வர் பாலபிரேமா பரிசு வழங்கினார். போட்டிகளை தேசிய நடுவர் அஜ்மல்கான் நடத்தினார். ஜே.சி.ஐ., அலுமினி கிளப் தலைவர் ஜெயமணி, செயலாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us