UPDATED : நவ 15, 2026 05:56 PM
ADDED : நவ 15, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
தேனி: குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
அகாடமி இணை செயலாளர் நுார்ஜஹான் தலைமை வகித்தார். பேராசிரியை மேரிசுபா போட்டிகளை துவக்கி வைத்தார். தமிழ்நாடு சதுரங்க கழக நடுவர் சையது மைதீன் வரவேற்றார். தேசிய நடுவர் அஜ்மல்கான் போட்டிகளை நடத்தினார். 7 வயது பிரிவில் வருண், சர்வேஷ்குமார், தர்சன் பாண்டியன், 9 வயது பிரிவில் ஆத்விக், வேதாந் நரசிம்மன், கீர்த்தீஸ், 11 வயது பிரிவில் ரிஷிநந்தன், தஸ்வரத் பிரபாகரன், ரக்சன், 15 வயது பிரிவில் சாத்வீகா, புவின்ராஜா, சூரிய குமரன் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
