ADDED : மார் 11, 2024 07:01 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
விழாவிற்கு அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். பொருளாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். அகாடமி தலைவர் சைது மைதீன் வரவேற்றார். தேனி கம்மவார் சங்க சி.பி.எஸ்.இ., பப்ளிக் பள்ளி முதல்வர் பாலபிரமோதேவி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். செஸ்போட்டி 15 வயதிற்கு உட்பட்டு மாணவர்கள், மாணவிகள் பிரிவுகளில் நடந்தது. மாணவர்கள் பிரிவில் சைரஸ்ப்ளசன், அஸ்வத், பிரித்திவ்பாண்டியன், மாணவிகள் பிரிவில் தாரணிக்காஸ்ரீ, பரணி, தியாஸ்ரீ ஆகியோர் முதல் 3 இடங்களை வென்றனர். சின்னமனுார் ரைட்வே அகாடமி இயக்குனர் மேனகாவிற்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை இணைச் செயலாளர் அஜ்மல்கான் செய்திருந்தார்.
