/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட விளையாட்டு மைதானம் விரிவாக்கம்
/
மாவட்ட விளையாட்டு மைதானம் விரிவாக்கம்
ADDED : நவ 27, 2024 08:15 AM

தேனி, : தேனி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அரசு நிலத்தில் மைதானத்தை விரிவு படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மாவட்ட விளையாட்டு அரங்கம் வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. விளையாட்டு அரங்கத்தில் தடகள மைதானம், கபடி, வாலிபால், நீச்சல், ஹாக்கி போட்டிகளுக்கு தனி மைதானங்கள் உள்ளன.
தற்போது புதிய நவீன உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு எதிரே உள்ள இடத்திலும் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகளை ஊரக வளர்ச்சித்துறையினர் துவக்கி உள்ளனர்.
அரசுக்கு சொந்த மான நிலத்தில் வளர்ந்திருந்த புற்கள், கருவேல மரங்களை அகற்றி இடத்தை சமப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன.