தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்ட தொடர் கிரிக்கெட்

மாவட்ட தொடர் கிரிக்கெட்

மாவட்ட தொடர் கிரிக்கெட்


ADDED : ஜூன் 23, 2025 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேசன், தேனி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சார்பில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர் நடந்து வருகின்றன.

போட்டிகள் தேனி ஆயுதப்படை மைதானம், சின்னமனுார் விகாஷா பள்ளி மைதானம், கம்மவார் சங்கம் கல்வி நிறுவன மைதானம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகின்றன.

டிவிஷன் 'ஏ' போட்டியில் மிஷன் கன்ஸ், ஒய்.எஸ்.சி.ஏ., அணிகள் மோதியதில் மிஷன்கன்ஸ் அணி 44.2 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஒய்.எஸ்.சி.ஏ., அணி 26.3 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

டிவிஷன் 'பி' போட்டியில் மேனகா மில்ஸ் கிரிக்கெட் பவுண்டேஷன் அணி 30 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த ஸ்பார்டன் பி.பி.எம்., அணி 23 ஓவர்களில் 107 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

புளு காப்ஸ் அணி 27.2 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சேசிங் செய்த உதயா சி.சி., அணி 19.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.

மெஜஸ்டிக் அணி 30 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த நியூ பிரண்ட் அணி 16 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து, தோல்வியை தழுவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us