தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/திருக்கல்யாண நிகழ்ச்சி

திருக்கல்யாண நிகழ்ச்சி

திருக்கல்யாண நிகழ்ச்சி


ADDED : நவ 16, 2026 08:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 08:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.

மலர் அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. சிவசுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். வடுகபட்டி வள்ளி தேவசேனா செந்தில் முருகன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழாவை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன் தினம் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பருப்பு நீர் கோயில் சார்பில் வழங்கப்பட்டது. நேற்று நடந்த சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் நடந்த சுவாமி ஊர்வலத்துக்கு பின் சிறப்பு பூஜைகள், விரதமிடுதல், அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us