/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தே.மு.தி.க., கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைக்கும் : பொதுச் செயலாளர் பிரேமலதா பேச்சு
/
தே.மு.தி.க., கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைக்கும் : பொதுச் செயலாளர் பிரேமலதா பேச்சு
தே.மு.தி.க., கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைக்கும் : பொதுச் செயலாளர் பிரேமலதா பேச்சு
தே.மு.தி.க., கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைக்கும் : பொதுச் செயலாளர் பிரேமலதா பேச்சு
ADDED : நவ 19, 2025 06:29 AM

போடி: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., கூட்டணி அமைக்கும் கட்சிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என போடி பொதுக்கூட்டத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.
போடியில் தே.மு.தி.க., பொதுக்கூட்டம் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. வடக்கு மாவட்ட அவைத் தலைவர் மாயி, பொருளாளர் பால்பாண்டி, பொறியாளர் அணி துணை செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
போடி நகர செயலாளர்கள் சேதுமுருகன். காஜா மைதீன் வரவேற்றனர்.
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதாவது: தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிக்கு சவால் விடும் வகையில் 63 ஆயிரம் பூத்களிலும் பூத் கமிட்டி அமைத்தது தே.மு.தி.க., தான். வெற்றி, தோல்வி, துரோகத்தை கடந்து 21ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளோம். தற்போது நிறைகுடமாக உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்குமோ அந்த கூட்டணி தான் வெற்றி பெறும்.
மலையை குடைந்து கனிம வளத்தை கொள்ளை அடித்து கோடி, கோடியாக சம்பாதிக்கும் போது தடுக்காத அரசு, மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றால் ஏன் விரட்டுகிறீர்கள். தமிழகத்தில் மணல், கனிமவள கொள்ளை தாராளமாக நடக்கிறது.
இதனை தடுக்காத போது தே.மு.தி.க., அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
போடியில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள மா பதனிடும் தொழிற்சாலை, இலவம் பஞ்சு, வெற்றிலைக்கு உரிய விலை கிடைக்கவும், குரங்கணி - டாப் ஸ்டேஷன், வடக்கு மலைக்கு ரோடு வசதி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

