ADDED : மார் 04, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் தி.மு.க.,பொதுக் கூட்டம் நகரச் செயலாளர் லோகந்துரை தலைமையில் நடந்தது.
நகர துணைச் செயலாளர் கண்ணப்பன் வரவேற்றார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது குறித்தும், மக்களுக்கு அறிவித்த திட்டங்களை விளக்கியும் முன்னாள் அமைச்சர் தமிழரசி பேசினார்.
தேனி தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

