ADDED : ஜன 10, 2026 05:56 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் திராவிட பொங்கல் சமூக நீதி திருவிழாவை முன்னிட்டு, வட்டார அளவிலான கபாடி போட்டி எ.புதுப்பட்டியில் நடந்தது.
போட்டியில் 10 க்கும் அதிகமான அணிகள் பங்கேற்கின்றனர். மாநில உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார்.
வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
பெரியகுளம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் முத்துராமலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், வடுக பட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
2 ம் நாள் போட்டியை தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி., துவக்கி வைத்தார் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.-
