ADDED : செப் 12, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.13–
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே முதல்வர் விஜயை கண்டித்து தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். சட்டசபையில் மிசா காலத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சிறை சென்றடையும், உருவகேலி செய்ததை கண்டித்து முதல்வர் விஜய்க்கு எதிராக கோஷமிட்டனர். இதில் எம்.எல்.ஏ., மகாராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மூக்கையா, சரவணக்குமார், லட்சுமணன் உள்பட நிர்வாகிகள்,கட்சியினர் பங்கேற்றனர்.
