/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தோழி மகளிர் விடுதி தேனியில் தயாராகிறது
/
தோழி மகளிர் விடுதி தேனியில் தயாராகிறது
ADDED : நவ 13, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சமூக நலத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பணிக்கு செல்லும் பெண்களுக்கான தோழி மகளிர் விடுதி அமைக்கப்பட்டு வருகிறது.
தேனியில் ரூ. 5.19 கோடி செலவில் பழனிசெட்டிபட்டியில் இந்த விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 50 பேர் தங்கும் வகையில் படுக்கை வசதி, கண்காணிப்பு கேமரா, குடிநீர் உள்ளிட்ட வசதிகளுடன் தயாராகி வருகிறது.இந்த விடுதி கட்டுமான பணிகள் முடிவடைந்து 2026 மார்ச் அல்லது ஏப்.,ல் பயன்பாட்டிற்கு வரும். வெளியூரில் இருந்து மாவட்டத்தில் பணிபுரியு பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

