தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வரையாடு கணக்கெடுப்பு நிறைவு

 வரையாடு கணக்கெடுப்பு நிறைவு

 வரையாடு கணக்கெடுப்பு நிறைவு


ADDED : ஏப் 29, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு: இரவிகுளம் தேசிய பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் வரையாடுகள் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் நேற்று முன்தினம் இரவு மூணாறுக்கு வந்தனர்.

கேரளாவில் வரையாடு கணக்கெடுப்பு ஏப்.24ல் துவங்கியது. மாநிலத்தில் 19 வனப் பிரிவுகளில் நடந்த கணக்கெடுப்பில் 4 பேர் வீதம் 95 குழுக்கள் பங்கேற்றனர். நாட்டில் மிகவும் அதிகமாக மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு மூணாறுக்கு வந்தனர். அவர்கள் வனத்துறை கட்டடத்தில் ஒன்று சேர்ந்து கணக்கெடுப்பு தொடர்பான தகவல்களை, கணக்கெடுப்புக்கு தலைமை வகித்த மூணாறு வனஉயிரின பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன், உதவி பாதுகாவலர் நிதின்லால் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். 'தகவல்களை சரிபார்த்த பின்னர் தலைமை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன்பிறகு வரையாடுகளின் கணக்கு வெளியிடுப்படும், என வன உயிரின பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன், உதவி பாதுகாவலர் நிதின்லால் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us