தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஜல் ஜீவன் திட்டம் முடங்கியதால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு

 ஜல் ஜீவன் திட்டம் முடங்கியதால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு

 ஜல் ஜீவன் திட்டம் முடங்கியதால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு


ADDED : மார் 05, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர்: சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஜல் ஜீவன் திட்ட பணிகள் முடங்கி உள்ளதால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு ஒவ்வொருவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்து ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கியது.

முதற்கட்டமாக ஊராட்சிகளில் மக்கட்தொகை அடிப்படையில் ரூ.20 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டது. அதில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், உறைகிணறு அமைத்தல், பகிர்மான குழாய் பதித்தல், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தேனி மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் இத்திட்ட பணிகள் 50 சதவீதம் கூட முடிவடையவில்லை. இத்திட்ட ஒப்பந்தகாரர்கள் பலர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

இவர்கள் பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு சென்றதால் பல ஊராட்சிகளில் இத்திட்டம் அரைகுறை பணியுடன் முடங்கி உள்ளது.

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் பல ஊராட்சிகளில் இத்திட்ட பணிகள் பாதி கூட முடியவில்லை. சில ஊராட்சிகளில் பணிகள் முடிந்தும், குழாய்களில் குடிநீர் வரவில்லை.

உதாரணமாக புலி குத்தி ஊராட்சிக்கு ரூ.50 லட்சம், சீப்பாலக்கோட்டைக்கு ரூ. 70 லட்சம், அய்யம்பட்டிக்கு ரூ.59 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இத்திட்டம் முழுமை பெறாததால் பல ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனை சின்னமனுார் ஒன்றிய அதிகாரிகள் கண்டு கொள்வும் இல்லை. இதுனால் பொதுமக்கள் கோடைகாலத்தில் மேலும் பாதிக்கும் நிலை உள்ளது. மாவட்ட அளவில் ஜல் ஜீவன் திட்ட பணிகளை ஆய்வு செய்ய கலெக்டர் குழு அமைத்து உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us