ADDED : மார் 28, 2026 10:30 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்;பெரியகுளம் அருகே மேல்மங்கலம் ராஜ காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து 47. ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் மேல்மங்கலத்திலிருந்து பெரியகுளம் நோக்கி வரும்போது, பங்களாபட்டி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ புளியமரத்தில் மோதியது.
இதில் கீழே விழுந்த முத்து மீது, ஓட்டி வந்த ஆட்டோ விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--
