/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு ரோலரில் சிக்கிய டிரைவர் இறப்பு
/
ரோடு ரோலரில் சிக்கிய டிரைவர் இறப்பு
ADDED : ஜன 22, 2024 05:52 AM
ஆண்டிபட்டி: நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன் 46. ரோடு ரோலர் டிரைவர். வத்தலக்குண்டு புதுப்பட்டியைச் சேர்ந்த அஸ்லாமிடம் வைகை புதூரில் ரோடு சீரமைக்கும் பணி செய்து வந்தார். நேற்று முன் தினம் ரோலர் வாகனத்தில் வைகைப்புதூர் மேல்மங்கலம் ரோட்டில் செல்லும்போது வாகனம் ரோட்டில் இடது புறம் பின்நோக்கி இறங்கி உள்ளது. அப்போது ரோலரில் இருந்து முத்துராமன் கீழே குதித்துள்ளார்.
எதிர்பாராத விதமாக ரோலர் பின் சக்கரத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மகன் மதன் புகாரில் வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.