ADDED : நவ 01, 2025 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கேரளா, மூவாற்றுபுழா அருகே ஏனநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்டோரோய் 25, இவர், உறவினர்கள் நான்கு பேருடன் அடிமாலி அருகே பணிக்கன்குடியில் உறவினர் திருமணத்திற்கு காரில் வந்தார். காரை ஆன்டோரோய் ஓட்டினார்.
திருமணத்தில் பங்கேற்று விட்டு ராஜகுமாரி வழியாக மூணாறுக்கு வந்து கொண்டிருந்தனர்.
இடமற்றம் பகுதியில் வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதில் பலத்த காயம் ஏற்பட்டு ஆன்டோரோய் இறந்தார்.
கார், மரம் தட்டி நின்றதால் மீதமுள்ள நான்கு பேரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
ராஜாக்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓட்டல் நிர்வாகம் படித்து முடித்த ஆன்டோரோய் வெளிநாடு செல்ல தயாராகி கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிட தக்கது.

