/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிரைவர்கள் மோதல் : டி.எஸ்.பி. பேச்சு வார்த்தையில் தீர்வு
/
டிரைவர்கள் மோதல் : டி.எஸ்.பி. பேச்சு வார்த்தையில் தீர்வு
டிரைவர்கள் மோதல் : டி.எஸ்.பி. பேச்சு வார்த்தையில் தீர்வு
டிரைவர்கள் மோதல் : டி.எஸ்.பி. பேச்சு வார்த்தையில் தீர்வு
ADDED : பிப் 03, 2025 06:09 AM
மூணாறு,: மூணாறில் சுற்றுலா கார், ஆன்லைன் டாக்சி ஆகியவற்றின் டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது.
சுற்றுலா நகரான மூணாறில் நுாற்றுக்கணக்கான சுற்றுலா கார்கள் உள்ளன. அவற்றிற்கு சுற்றுலா பயணிகளின் வருகையை பொருத்து சவாரி கிடைக்கும். பெரும்பாலான நாட்களில் சவாரி கிடைப்பது இல்லை.
இதனிடையே கேரளாவில் பிற பகுதிகளில் இருந்து மூணாறுக்கு சவாரி வரும் ஆன் லைன் டாக்சிகள் திரும்புகையில் குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச் சென்றனர்.
அதனால் மூணாறைச் சேர்ந்த சுற்றுலா கார் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதனால் ஆன்லைன் டாக்சிக்கு எதிராக உள்ளூர் டிரைவர்கள் களம் இறங்கியதால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதனால் சுற்றுலா கார் டிரைவர்கள் சங்கத்தினர் போலீசாரை அணுகினர்.
மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் மூணாறில் இருந்து திரும்பும் ஆன்லைன் டாக்சிகளில் குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றி செல்லக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
அதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், டி.எஸ்.பி., பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.

