ADDED : பிப் 14, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி பங்களாமேட்டில் மாவட்ட அனைத்திந்திய ஓட்டுநர்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய அரசு குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தை நிபந்தனையின்றி திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும், டிரைவர்களின் கையெழுத்து இன்றி ஆன்லைன் வழக்குகள் பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ், மாவட்டச் செயலாளர் சஞ்சய்காந்தி, துணைச் செயலாளர் செல்வம், தேனி நகரத் தலைவர் கண்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நகரச் செயலாளர் பிச்சைமணி நன்றி தெரிவித்தார். முன்னதாக உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி மறுத்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

