ADDED : ஏப் 24, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறையில் ட்ரோன் தொழில்நுட்ப மைய துவக்க விழா நடந்தது. மாணவர்கள் ட்ரோன் பற்றி அறிந்து கொள்ள, அதனை இயக்க கற்றுக்கொள்ள இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் சுப்ரமணி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழாவில் திருச்சி டிரான்சிஸ்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ட்ரோன் தொழில்நுட்ப பயிற்சி, வேலைவாய்ப்பு வழங்குதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
