/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : அக் 12, 2025 06:30 AM
கூடலுார் : கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு சார்பில் போதைப்பொருள் மற்றும் தற்கொலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இணைச்செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர். தமிழ் துறை பேராசிரியை தமிழ்ச்செல்வி வரவேற்றார்.
மன அழுத்தம் குறித்த பிரச்னைகளை கையாளும் விதம், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. என்.ஆர்.டி., மருத்துவமனை தலைவர் தியாகராஜன், டாக்டர் ரூத் மனோரஞ்சன், கல்லுாரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள், கல்லுாரி பேரவை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.