ADDED : டிச 04, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்:ஜூனில் துவங்கி செப்.,வரை சீசனில் முருங்கை காய் மகசூல் கிடைக்கும். மழை, பனிக் காலமான நவ.,முதல் ஜனவரி வரை காய் வரத்துஇருக்காது. இந்த காலகட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும்.
தேனிமாவட்டம் கம்பத்தில் முருங்கை காய் விலை படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ. 250 ஆக விற்கப்பட்டது. இதனை தொடர்ந்து கேரளாவில் கிலோ ரூ.500 என உச்சம் தொட்டது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் முருங்கை காய் அளவு குறைந்ததால் அம்மாநில வியாபாரிகள் ' பரோடா முருங்கை 'ரகத்தை வடமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்கின்றனர். ஒரு காய் அரை மீட்டர் நீளம் கொண்டது.