ADDED : ஜன 19, 2025 05:38 AM
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே குன்னூரை சேர்ந்தவர் பிரேம்நாத் 24, இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார்.
ஜனவரி 16 இல் குன்னூரில் தனது உறவினர்களுடன் அம்மச்சியாபுரம் ரோடு களத்து மேட்டிற்கு அருகே நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்த சிலர் களத்து மேட்டில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்துள்ளனர். இது குறித்து பிரேம்நாத் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் அம்மச்சியாபுரம் நந்தகுமார் ஆட்டோவில் இருந்த அரிவாளை எடுத்து தாக்கியுள்ளார். அவருடன் இருந்தவர்கள் பீர் பாட்டில், செங்கலால் தாக்கியதில் பிரேம்நாத், அவருடன் இருந்த பாண்டி குமார் 30, கோபிநாத் 29, மிதுன்பாரத் 28, ஆகியோர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து விசாரித்த க.விலக்கு போலீசார் தகராறில் ஈடுபட்டு தாக்கிய அம்மச்சியாபுரம் நந்தகுமார் 23, ராகுல் ராஜன் 30, பிரேம்நாத் 24, ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சங்கர், சஞ்சய்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

