தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வைகை அணை நீர்மட்டம் குறைந்ததால் 58ம் கால்வாய் நீர் வெளியேற்றம் நிறுத்தம்

 வைகை அணை நீர்மட்டம் குறைந்ததால் 58ம் கால்வாய் நீர் வெளியேற்றம் நிறுத்தம்

 வைகை அணை நீர்மட்டம் குறைந்ததால் 58ம் கால்வாய் நீர் வெளியேற்றம் நிறுத்தம்


ADDED : நவ 15, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் நேற்று காலை 10:00 மணிக்கு 67.19 அடியாக குறைந்தது. இதனை தொடர்ந்து 58ம் கால்வாயில் வெளியேறும் நீர் தானாகவே நின்று விட்டது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வசதி உள்ளது. வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே கால்வாய் மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்ற முடியும். அணை நீர்மட்டம் அக்.29 ல் 69.46 அடியாக இருந்தபோது (அணையின் உயரம் 71 அடி) , 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி நீர் வீதம் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு ஆற்றின் வழியாகவும், கால்வாய் வழியாகவும் நீர் வெளியேறியதால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதனைத் தொடர்ந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி வீதம் வெளியேறிய நீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. நேற்று அணை நீர்மட்டம் 67.19 அடியான போது, 58 ம் கால்வாய் வழியாக வெளியேறும் நீரும் நின்று போனது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1565 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு வினாடிக்கு 2299 கன அடி நீர் வெளியேறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us